9 குழந்தைகள் இறந்த விவகாரம்: விசாரணை குழு அமைத்து குஜராத் முதல் மந்திரி உத்தரவு

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் இறந்துள்ளது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
9 குழந்தைகள் இறந்த விவகாரம்: விசாரணை குழு அமைத்து குஜராத் முதல் மந்திரி உத்தரவு
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 குழந்தைகள் குறைவான் எடையுடன் பிறந்ததால் உயிரிழந்துள்ளன. இதேபோல், மற்ற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 4 

குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 9 குழந்தைகள் இறந்துள்ளது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் 9 குழந்தைகள் இறந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல் மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், குழந்தைகள் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி அமைக்கப்படும். கமிட்டியினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 

குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com