ஜி.எஸ்.டி. ஜூரம்: குழந்தைக்கு ஜி.எஸ்.டி. என பெயர் சூட்டிய தம்பதி

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட சமயத்தில் ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயரிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஜி.எஸ்.டி. ஜூரம்: குழந்தைக்கு ஜி.எஸ்.டி. என பெயர் சூட்டிய தம்பதி
Published on

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட சமயத்தில் ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயரிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தியா முழுவதும் ஒரே வரி என்பதை வலியுறுத்தும் வகையில், சமீபத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது.

இதற்காக, புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு நடந்த சிறப்பு கூட்டத்தில் பாஜக அரசு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பீவா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜூன் 30 நள்ளிரவு சரியாக 12.02 மணிக்கு குழந்தை பிறந்தது. அதைதொடர்ந்து அந்த குழந்தையின் பெற்றோர், ஜி.எஸ்.டி வரி அறிமுக நேரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயரிட்டு அழைத்தனர்.

குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயர் வைத்ததை அறிந்த ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், ’’ஜி.எஸ்.டி குழந்தைக்கு வாழ்த்துக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com