செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92,150 கோடி - நிதியமைச்சகம் தகவல்

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92,150 கோடி - நிதியமைச்சகம் தகவல்

செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.92,150 கோடி கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on

புதுடெல்லி:

நாட்டில் புழக்கத்தில் இருந்த பல்வேறு வரி விதிப்புகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்கிற ஒரே விதமான சட்டம் கொண்டு வரப்பட்டது. சேவை வரி, வாட் வரி, உற்பத்தி வரி உள்ளிட்ட பல வரிகள் நீக்கப்பட்டன. ஜூலை மாதம் இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது. ஜூலை மாதத்தில் இந்த வரியின் மூலம் அரசுக்கு 94,063 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 90,669 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது.  

அவ்வகையில் செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.92,150 கோடி கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜி.எஸ்.டி. மூலம் இந்தியா முழுவதும் 42.91 லட்சம் பேரிடமிருந்து ரூ.92,150 கோடி வசூலாகியுள்ளது. மத்திய ஜி.எஸ்.டி.யாக ரூ.14,042 கோடி, மாநில ஜி.எஸ்.டி.யாக ரூ.21,172 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.48,948 கோடி கிடைத்துள்ளது. ரூ.7,988 கோடி ரூபாய்க்கு இழப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. தாக்கலுக்காக அக்டோபர் 23-ம் தேதி வரை 42.91 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மூலம், கடந்த ஜூலை மாதம் ரூ.95 ஆயிரம் கோடியும், ஆகஸ்ட் மாதம் ரூ.91 ஆயிரம் கோடியும் கிடைத்துள்ளது என கூறியுள்ளது.

இது கடந்த மாதத்தைவிட ரூ.1,481 கோடி அதிகமாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com