

சென்னை:
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், அரச் உழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன் பணம் உயர்த்தப்பட உள்ளது.
ஏற்கனவே, 5 ஆயிரத்தில் இருந்த முன்பணம் மேலும் 5 ஆயிரம் அதிகரித்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.