திருவண்ணாமலை அரசு அதிகாரி வீட்டில் 48 பவுன் நகை கொள்ளை

திருவண்ணாமலையில் அரசு அதிகாரி வீட்டில் 48 பவுன் நகை கொள்ளை போனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை அரசு அதிகாரி வீட்டில் 48 பவுன் நகை கொள்ளை
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்காலில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் வேடி (வயது 60). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக அதிகாரி.

இவர், தனது மனைவி செல்வியுடன் சென்னையில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இன்று காலையில் வீடு திரும்பிய போது, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில், பீரோ உடைக்கப்பட்டு 48 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com