தமிழக அரசு அனுமதி: உற்சாகமாக பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள்

தமிழக அரசு அனுமதி அளித்ததால் கோவையில் விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மைதானத்தில் வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
மைதானத்தில் வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

கோவை:

கொரோனா தொற்று காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன.இது போல் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி கூடங் களை திறக்க அனுமதி வழங்கியது. சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவையை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். கோவை நேரு விளையாட்டு மைதானம் அருகே உள்ள மாநகராட்சி குத்துச்சண்டை மைதானத்தில் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இது குறித்து பயிற்சியாளர் மயில்சாமி கூறுகையில், பயிற்சிக்கு வரும் வீரர்கள், வீராங்கனைகளின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. வீரர்கள் பயன்படுத்தும் கையுறைகள், பயிற்சி உபகரணங்கள் ஆகியவை மீதும் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் தொடாமல் ஷேடோ பாக்சிங் என்ற முறையில் பயிற்சி எடுப்பார்கள். விளையாட்டு வீரர்கள் நீண்ட காலம் பயிற்சி எடுக்காவிட்டால், அவர்களின் திறமை பாதிக்கப்படும். தற்போது பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் சர்வதேச போட்டி யில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனை என 2 பேர், தேசிய போட்டியில் பங்கேற்கும் 8 வீரர்கள், வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கும்படி பிற விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பம் வந்து உள்ளது. அதை பரிசீலித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com