பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டமாக இருக்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி

பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே அடுத்த திட்டமாக இருக்க வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சாமி
சுப்பிரமணிய சாமி
Published on

புதுடெல்லி:

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரித்து மாநிலங்களவையில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலேயே பாராளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் இந்த அரசின் அடுத்த திட்டமாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தை பிரதமரும், உள்துறை மந்திரியும் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்’ என்று கூறினார்.

இனி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறிய சுப்பிரமணிய சாமி, தங்களிடம் வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் கூறுவதை தவிர, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு மத்தியஸ்தம் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com