அரசு ஊழியருக்கு புதிய ஊதியம் நவம்பர் 30-ந்தேதி கிடைக்கும்

அரசு ஊழியருக்கு புதிய ஊதியம் நவம்பர் 30-ந்தேதி கிடைக்கும்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதியம் நவம்பர் 30-ந் தேதி கிடைக்கும் என தமிழக அரசின் நிதித்துறை தெரிவித்துள்ளது.
Published on

சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டன.

உயர்த்தப்பட்ட மாத ஊதியம் அக்டோபர் மாதம் 30-ந்தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 30-ந்தேதி புதிய சம்பளம் கிடைக்கவில்லை.

புதிய சம்பள உயர்வு குறித்து தமிழக அரசின் நிதித்துறையானது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி புதிய ஊதிய விகிதம் நவம்பர் மாத இறுதியில் இருந்து (30-ந்தேதி) நடைமுறைக்கு வரும்.

இதனால் உயர்த்தப்பட்ட புதிய ஊதியம் நவம்பர் 30-ந் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும். ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியல், உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்திற்கு தகுந்தாற்போல திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக தேசிய தகவலியல் மையம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பணிகள் முடிந்ததும் நவம்பர் 30-ந்தேதி உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் மாதத்திற்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவை தொகையாக வருகிற 20-ந் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com