மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - 2 பேர் பலி

பள்ளிப்பட்டு - சோழிங்கர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
விபத்து
விபத்து
Published on

பள்ளிப்பட்டு:

பள்ளிப்பட்டை அடுத்த கோணசமுத்திரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (42). விவசாயி. இவர் உறவினர் கார்த்திக்குடன் (21) இன்று காலை வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பள்ளிப்பட்டு - சோழிங்கர் நெடுஞ்சாலையில் குமாரராஜபேட்டை பகுதியில் சென்றபோது எதிரே வேலூரில் இருந்து பள்ளிப்பட்டு நோக்கி வந்த அரசு பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ரவிக்குமார், கார்த்திக் ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

பள்ளிப்பட்டு போலீசார் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com