பதவிஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கைகளை சேர்த்துப்பிடித்த கவர்னர்

பதவிஏற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கியபோது அவர்கள் இருவரின் கைகளையும் கவர்னர் வித்யாசாகர் ராவ் சேர்த்துப் பிடித்தார்.
பதவிஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கைகளை சேர்த்துப்பிடித்த கவர்னர்
Published on

சென்னை:

கவர்னர் மாளிகையில் நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டதும், அவர்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கியபோது அவர்கள் இருவரின் கைகளையும் இணைத்து வைப்பது போல் கவர்னர் 2 பேரின் கைகளையும் சேர்த்துப் பிடித்தார்.

இனிமேலாவது 2 பேரும் பிரியாமல் சேர்ந்து இருங்கள் என்று சொல்லாமல் சொல்வது போல் அந்த காட்சி அமைந்து இருந்தது. அதைக் கண்ட அனைவரும் சிரித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பதவிஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், துறையின் அதிகாரிகள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com