கோரக்பூரில் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உள்பட 9 பேர் மீது வழக்கு

கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முன்னாள், முதல்வர் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோரக்பூரில் குழந்தைகள் பலியான விவகாரம்: மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் உள்பட 9 பேர் மீது வழக்கு
Published on

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமீபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் அறிக்கை அளித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா, டாக்டர் கபீல் கான், மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும் புஸ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் உள்பட 9 பேர் மீது ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு கோரக்பூருக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவர் மீதும் குற்றச்சதி, கொடூர கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் எதிர்ப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com