

சென்னை:
த.மா.கா. சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது. மேலும் மத நல்லிணக்கத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த உத்தரவை த.மா.கா. முழுமையாக எதிர்க்கிறது.
எனவே மாட்டு இறைச்சிக்கு மத்திய பா.ஜனதா அரசு விதித்த தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாளை(புதன்கிழமை) காலை 10 மணி அளவில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் த.மா.கா. மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.