டெங்குவை ஒழிப்பதில் மத்திய-மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தவில்லை: ஜி.கே.வாசன்

டெங்குவை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
டெங்குவை ஒழிப்பதில் மத்திய-மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தவில்லை: ஜி.கே.வாசன்
Published on

சென்னை:

கோடம்பாக்கம் அன்பு உள்ளம் முதியோர் இல்லத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று தீபாவளி கொண்டாடினார். முதியோர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தான் முதியோர்கள் அதிகமாகவும் உள்ளனர். தனியாகவும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதும் பாதுகாப்பதும் நமது கடமை.

டெங்குவை ஒழிப்பதில் மத்திய-மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தவில்லை. பல்வேறு வெளிநாடுகளில் டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நவீன தொழில் நுட்பங்கள் உள்ளன.

அவற்றை கொண்டு வருவதிலும், ஆராய்ச்சிகள் செய்வதிலும் மத்திய அரசு தவறி விட்டது.

உலகத்திலேயே இந்தியாவில் தான் சுகாதார திட்டங்களுக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுகிறது. தற்போது மோடி அரசு அதையும் குறைத்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இல்ல காப்பாளர் முனவர் பாட்ஷா, மாநில நிர்வாகிகள் கத்திபாரா ஜனார்த்தனம், சக்தி வடிவேல், அனுராதா அபி, சைதை.மனோகரன், ஜவஹர் பாபு. ஜி.ஆர் வெங்கடேஷ், டி.என்.அசோகன், கே.ஆர் டி.ரமேஷ், சைதை நாகராஜ், டி.எம்.பிரபாகர். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com