செல்பீ மோகத்தால் குளத்தில் விழுந்து பலியான சிறுமி

ஜார்க்கண்டில் உள்ள போகரோ இரும்பு ஆலையின் குளத்திற்கு அருகில் செல்பீ எடுக்கும் போது தவறி விழுந்து 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்பீ மோகத்தால் குளத்தில் விழுந்து பலியான சிறுமி
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள போகரோ மாவட்டத்தில் இரும்பு ஆலை உள்ளது. இந்த இரும்பு ஆலை பயன்பாட்டிற்காக அருகில் குளங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள பாடா காட்டல் காஷ்மீரி காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சுலேகா குமாரி அந்த குளத்தில் அருகில் நின்று செல்பீ எடுத்துக் கொண்டார்.

அப்போது கால் தவறி குளத்தின் உள்ளே விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர் உடல் இன்னும் கிடைக்கவில்லை.

’செல்பீ மோகத்தால் பலர் உயிர்களை இழந்து வருகின்றனர்.  மலை மீது ஏறி எடுத்தல் , துப்பாக்கியுடன் ’செல்பீ’ எடுத்தல் என விபரித ஆசை கொண்டவர்கள் எதிர்பாராத விபத்துக்களால் விலைமதிப்பில்லா உயிரை இழந்து விடுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com