ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹேமலதா உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசீந்திரன் தலைமையில் போலீசார் தண்ணீர்பந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாட்டுத்தீவனம் ஏற்றிகொண்டு வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது ஆட்டோவில் மாட்டுத்தீவனங்களுக்கு இடையில் மறைத்து வைத்து 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆட்டோவில் இருந்த முகமது சாதிக், அப்துல்காதர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com