கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல் கைது

கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கலை போலீசார் இன்று கொச்சியில் கைது செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.

வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது. 

பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று அறிவித்தது. 

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal

X

Maalai Malar
www.maalaimalar.com