நைஜீரியாவில் ஆளுநர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

நைஜீரியாவில் துணை ஆளுநர் சென்ற வாகன அணிவகுப்பின் மீது மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உள்பட 4 பேர் பலியாகினர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

லாகோஸ்:

நைஜீரியாவின் நசராவா மாகாணத்தின் துணை ஆளுநர் இம்மானுவேல் நேற்றிரவு அபுஜா நோக்கி பாதுகாப்பு படைகளுடன் சென்று கொண்டிருந்தார். இன்று அபுஜாவில் நடைபெற இருந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.

திடீரென வழியில் மர்ம நபர் ஒருவர், ஆளுநரின் வாகன அணிவகுப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார். இதில் இதில் வாகன ஒட்டுநர் மற்றும் 3 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com