

பாட்னா:
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று காலை சிவான் மாவட்டத்தில் உள்ள கச்சர் ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தனர். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது.
இதில், குழந்தை உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். #tamilnews