விடுதியில் தங்க வற்புறுத்தியதால் பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

விடுதியில் தங்கி படிக்க வற்புறுத்தியதால் பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விடுதியில் தங்க வற்புறுத்தியதால் பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் தில்லைநாதன். இவரது மகள் லாவண்யா (வயது 15). பழனியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

தற்போது 3 நாட்கள் விடமுறை என்பதால் வீட்டுக்கு வந்தார். அப்போது லாவண்யா தனது பெற்றோரிடம் தனக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என்றும் வீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு செல்வதாக கூறினார்.

அதற்கு பெற்றோர்கள் சமாதானம் செய்து இநத வருடம் மட்டும் விடுதியில் தங்கி படிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த லாவண்யா வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து வேடசர்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com