லாலுவுக்கு எதிரான மேலும் ஒரு கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு
ராஞ்சி:
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக பாக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில், தும்கா மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து ரூ.3.76 கோடி பணம் எடுத்த வழக்கு எண் RC 38/96 தொடர்பாக சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் வழியாக சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தலைமை கணக்காளர்
முகோபாத்யாயாவையும் இந்த வழக்கில் சேர்க்கும்படி லாலு பிரசாத் இன்று மனுதாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளது என நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மொத்தமுள்ள 31 குற்றவாளிகளில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன்னாத் மிஸ்ரா, முன்னாள் எம்.பி ஆர்.கே.ரானா, முன்னாள் மந்திரி வித்யாசாகர் உள்பட பலரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

