ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.
ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

திருச்சி:

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி வைதேகி (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள தேடுதல் பராமரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

வீட்டின் அருகிலேயே வேலை செய்யும் இடம் என்பதால் நடந்து சென்று வருவது வழக்கம். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பெரியார் நகர் பகுதியில் வைதேகி நடந்து வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். 

அந்த நேரம் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாததால் வைதேகியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வைதேகி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com