பாகிஸ்தான் - குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வெடிகுண்டு தாக்குதல் நடந்த பகுதி
வெடிகுண்டு தாக்குதல் நடந்த பகுதி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. 

இதன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு திடீரென வெடித்து சிதறியது.

போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com