பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)
பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)
Published on

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வெடிவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

வெடிவிபத்தில் இறந்த 5 பேரும் பெண்கள் என்றும், மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த 4 பெண்களில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

குருங்குடியில் நிகழ்ந்த விபத்தில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com