பெங்களூரில் அதிகாலையில் மதுபார் விடுதியில் தீவிபத்து: 5 பேர் பலி

பெங்களூரில் அதிகாலையில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 ஊழியர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரில் அதிகாலையில் மதுபார் விடுதியில் தீவிபத்து: 5 பேர் பலி
Published on

பெங்களூர்:

பெங்களூரின் மையப்பகுதியில் உள்ள கலாசிபாளையம் கடைகள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் நிறைந்த பரபரப்பான இடமாகும்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும் இங்கிருந்துதான் இயக்கப்படுகிறது. அதனால் கலாசிபாளையம் பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும்.

இங்கு கும்பார சங்க கட்டிடத்தில் ‘கைலாஷ் பார்’ என்ற மதுபான விடுதியும் அதனுடன் இணைந்த உணவகமும் செயல்படுகிறது. நேற்று இரவு இங்கு விடுதியும் உணவகமும் மூடப்பட்டதும் ஊழியர்கள் அனைவரும் உள்ளேயே தூங்கிக் கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென்று இங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென்று நாலாபுற மும் பரவியதால் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். என்றாலும் உள்ளே இருந்த பெண் உள்பட 5 பேர் தீயில் கருகி பலியானார்கள். அவர்கள் பெயர் சுவாமி, பிரசாத், மகேஷ் (தும்கூர்), மஞ்சுநாத் (ஹசன்), கீர்த்தி (மாண்டியா).

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com