போடி அருகே தீயில் கருகி இளம்பெண் பலி

போடி அருகே தீயில் கருகி இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிபத்து
தீவிபத்து
Published on

தேனி:

போடி டி.வி.கே.கே.நகரை சேர்ந்த முத்தாள்காமாட்சி மனைவி புஷ்பம்(36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். புஷ்பம் சம்பவத்தன்று தனது வீட்டில் சுடுதண்ணீர் வைப்பதற்காக மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் பரவியது. இதைபார்த்த அவரது கணவர் புஷ்பத்தை காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த புஷ்பம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com