பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீவிபத்து
தீவிபத்து
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி பிரிவில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரத்த வங்கிக்கு மேல் பகுதியில் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ரத்த வங்கியில் உள்ள ஏ.சி.யில் இருந்து தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com