ஏர்வாடியில் ஆமைகள் கடத்திய தந்தை - மகன் கைது

ஏர்வாடி நம்பியாற்றில் ஆமைகளை கடத்தியது தொடர்பாக தந்தை மகன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடியில் ஆமைகள் கடத்திய தந்தை - மகன் கைது
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் (44), அவரது மகன் இசக்கிமுத்து (19), இவர்களது உறவினர் முத்துக்குமார் (22). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவில் ஏர்வாடி நம்பியாற்றில் சுற்றி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஒரு சாக்கில் ஆமைகளை கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரையும் ஏர்வாடி போலீசார் களக்காடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ உத்தரவின் பேரில், வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் நம்பியாற்றில் உள்ள ஆமைகளை பிடித்து உணவுக்காக கொண்டு சென்றதாக கூறினர். வனத்துறையினர் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 3 பேருக்கும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 11 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவைகள் தலையணை வனப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com