மோடியுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு - காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கம்

முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.
மோடியுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு - காஷ்மீர் நிலவரம் குறித்து விளக்கம்
Published on

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜனதா, மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளர் நாசர் அகமதுவை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த நிலையில் பரூக் அப்துல்லா, நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவுகிற அமைதியற்ற சூழல் குறித்து, பிரதமர் மோடியிடம் அவர் விளக்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com