கருப்பம்புலத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் காத்து கிடக்கும் விவசாயிகள்

வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என விவசாயிகள் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளோடு காத்து கிடக்கின்றனர்.
நெல்
நெல்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுவதாக அறிவித்து நெல் கொள்முதல் செய்வதற்கு எடை மேடை, சாக்கு, நெல் தூற்றும் எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

நெல் கொள்முதலுக்கு தயாரான நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து அடுக்கி வைத்தனர். கடந்த மூன்று நாட்களாக பணியாளர் நியமிக்கப்படாததால் கொள்முதல் நடைபெறவில்லை. நேற்று திடீரென பெய்த மழையில் விற்பனைக்காக கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தன.

அதனை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நிலையில் விவசாயிகள் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளோடு காத்து கிடக்கின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையம் திறந்து உடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com