கம்லேஷ் திவாரி குடும்பத்தினருடன் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினரை அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.
கம்லேஷ் திவாரி குடும்பத்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
கம்லேஷ் திவாரி குடும்பத்துடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். 

நேற்று முன்தினம் மதியம் லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள  கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரியின் குடும்பத்தினர் இன்று காலை தலைநகர் லக்னோவுக்கு காரில் சென்றனர். முதல் மந்திரி வீட்டுக்கு சென்ற அவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத், கம்லேஷ் திவாரி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com