இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு - இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை வெளியுறவு மந்திரி திலக் மரபானாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு - இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை
Published on

கொழும்பு:

இலங்கையின் கொழும்பு நகரில் இரண்டாவது இந்திய பெருங்கடல் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன. இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கிடையே, சுஷ்மா சுவராஜ் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி திலக் மரபனாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இலங்கை வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், “ வளர்ச்சி மற்றும் சுபிட்சத்துக்கான கூட்டு இதுவாகும். வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், திலக் மரபனாவுடன் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மரபனாவுடன் முக்கிய விவகாரங்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.  

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை பயணம் செய்ததை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 76 தமிழக மீனவர்களை இலங்கை அண்மையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com