சவுதி அரேபியாவின் ஷியைட்டுகள் வசிக்கும் பகுதியில் குண்டுவெடிப்பு

சவுதி அரேபியாவின் ஷியைட்டுகள் எனப்படும் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியான கட்டீப்பில் நேற்று குண்டுவெடித்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஷியைட்டுகள் வசிக்கும் பகுதியில் குண்டுவெடிப்பு
Published on

சவுதி அரேபியாவில் ஷியைட்டுகள் எனப்படும் சிறுபான்மை அமைப்பினர் வசித்து வரும் கட்டீப் நகரில் பயங்கர சத்தத்துடன் நேற்று குண்டுவெடித்தது. பயங்கர சத்தத்துடன் மிகப்பெரிய அளவில் குண்டுவெடித்ததாக சம்பவ இடத்திற்கு அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீசார் கட்டீப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு சீல் வைக்கப்பட்டு, அந்த பகுதியை பயன்படுத்த தடையும் விதித்துள்ளனர்.

கார் குண்டுவெடிப்பு நடந்ததாக சவுதி அரேபிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கார்கள் தீயில் கருகி, கடும் புகைமூட்டத்தை உருவாக்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகிறது.

ஐ.எஸ். அமைப்பின் சன்னி தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2014-ல் இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஷியைட்டுகள் பலியாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com