மத்திய அரசு நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு - அமித்ஷா

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #Petrol #Diesel
மத்திய அரசு நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு - அமித்ஷா
Published on

புதுடெல்லி:

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெட்ரோல், டீசல் பொருள்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஒரு சில தினங்களில் விலை உயர்வு குறையும்.

மேலும், பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதையடுத்து, இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார். #Petrol #Diesel

X

Maalai Malar
www.maalaimalar.com