தமிழக காங்கிரசுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்- இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தை பிறந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #EVKSElangovan
தமிழக காங்கிரசுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்- இளங்கோவன்
Published on

இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய நாளையொட்டி ராயபுரத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்றைக்கு திருஷ்டி பரிகாரம் போல நான்கரை ஆண்டு காலம் இந்தியாவை மோடி ஆண்டு கொண்டிருக்கிறார். நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நான்கரை ஆண்டு காலங்களில் இதுவரை மோடி என்ன செய்துள்ளார். 91 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 2012 கோடி ரூபாய் பணம் விரையம் ஆகியுள்ளது.

முத்தலாக் சட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை. அதற்கு மாறாக விரிவான தெளிவான விவாதங்கள் வேண்டும் என்பதற்காகத் தான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்கள்.

ஆனால் எந்தவிதமான கோரிக்கையையும் ஏற்காமல் மசோதாவை அமல்படுத்தி உள்ளது ஏற்கத்தக்கதல்ல கண்டனத்துக்குரியது. மிகப்பெரிய விவாதத்திற்குப் பிறகு தான் மசோதாவை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

தை பிறந்தால் காங்கிரசுக்கு நல்ல காலம் பிறக்கும். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com