எந்த தேர்தலிலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது: மந்திரி ஈசுவரப்பா

கர்நாடகத்தில் டி.கே.சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் இருக்கும் மோதல் காரணமாக இடைத்தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலில் காங்கிரசால் வெற்றி பெற முடியாது.
ஈசுவரப்பா
ஈசுவரப்பா
Published on

விஜயாப்புரா :

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மந்திரி ஈசுவரப்பா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் ஒற்றுமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். ஆனால் இருவருக்கும் இடையே ஒற்றுமை கிடையாது என்பது, அவர்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கே நன்கு தெரியும்.

ஏற்கனவே நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது. கர்நாடகத்தில் டி.கே.சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் இருக்கும் மோதல் காரணமாக இடைத்தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலில் காங்கிரசால் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com