கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

ஈரோடு பஸ் நிலையத்தில் கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ் நின்று கொண்டிருந்தது.

அப்போது நாமக்கல் மாவட்டம் கலியனூரை சேர்ந்த மூர்த்தி (வயது 32) என்பவர் அங்கு வந்தார்.

திடீரென அவர் பஸ்சின் முகப்பு கண்ணாடியை உடைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதை கண்ட அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை கைது செய்த விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com