கேரளாவை உலுக்கிய ஷிஜா கொலை: குற்றவாளி அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை

கேரள மாநிலம் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலைக் குற்றவாளி அசாம் வாலிபர் அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை விதித்து எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவை உலுக்கிய ஷிஜா கொலை: குற்றவாளி அமீருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி அருகே பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா (30). இவர், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தனது வீட்டில் வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். கேரள மாநிலம் முழுவதும் இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அப்போது நடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் இந்த கொலை முக்கிய பிரச்சினையாக எடுத்து பிரசாரம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பிறகு கம்யூனிஸ்டு ஆட்சி பினராய் விஜயன் தலைமையில் அமைந்தது.

மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. சந்தியா தலைமையில் தனிப்படை அமைத்து பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்தார். ஏ.டி.ஜி.பி. சந்தியா திறமையாக துப்பு துலக்கி இந்த கொலையில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் அமீருல் இஸ்லாம் என்பவரை கைது செய்தார்.

மாணவி ஷிஜாவை கிண்டல் செய்ததால் அமீருல் இஸ்லாமை அவர் செருப்பால் அடித்ததாகவும், அந்த ஆத்திரத்தில் இந்த கொலையில் அமீருல் இஸ்லாம் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், ஓராண்டாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் கைதான அமீருல் இஸ்லாம் தான் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தல், தடையங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com