திருச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி அவர் கழுத்தில் கடந்த 5 பவுன் நகையை மர்ம வாலிபர் கொள்ளையடித்து சென்றார்.
திருச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை
Published on

திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கீதா (52). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதனால் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது திடீரென வீட்டிற்குள் மர்ம வாலிபர் புகுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் வாலிபர் கீதாவை தாக்கி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

இதேபோல் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் முருகன் (45), டிரைவர். இவர் வங்கியில் கடன் பெற்று மினி லாரி வாங்கியுள்ளார். அதற்கு தொகையை கட்ட முடியாமல் தவித்து வந்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com