ஆஷஸ் 2-வது டெஸ்ட்: 354 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து நிதான ஆட்டம்

இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 354 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.
Published on

அடிலெய்ட்:

ஆஸ்திரேலியா- இங்கி லாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 442 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 227 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

215 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்தின் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா திணறியது.

நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக் கெட்டுக்கு 53 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிந்தது. லயன் 14 ரன்னிலும், டிம்பெயின் 11 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 138 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து, 354 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர். நாளை ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில், விக்கெட் இழப்பின்றி விளையாடினால் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் குறியாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com