இங்கிலாந்து வீராங்கனைக்கு பேட்டை பரிசளித்த கோலி

தன்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தனது பேட்டை பரிசளித்தார். #ViratKohli #daniellewyatt
இங்கிலாந்து வீராங்கனைக்கு பேட்டை பரிசளித்த கோலி
Published on

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டேனிலி வியாட். கடந்த 2014-ம் ஆண்டு இவர் விராட்கோலியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். அவர் டுவிட்டர் மூலம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அரை இறுதியில் கோலி 72 ரன்கள் எடுத்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டத்தை பார்த்து டேனிலி இந்த காதல் விண்ணப்பத்தை அளித்தார். பின்னர் இங்கிலாந்து பயணத்தின் போது அவரை கோலி சந்தித்தார். நீங்கள் இதுபோல் டுவிட்டரில் பதிவு செய்யக்கூடாது என்று டேனிலிக்கு அவர் அறிவுறுத்தினார். இதற்கு டேனிலி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தன்னுடைய மிகப்பெரிய ரசிகை என்பதால் இங்கிலாந்து வீராங்கனை டேனிலி வியாட்டுக்கு கோலி பேட்டை பரிசாக அளித்தார்.

இந்த சம்பவங்களை டேனிலி தற்போது நினைவு கூர்ந்து உள்ளார். கோலி வழங்கிய அந்த பேட்டை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையே மும்பையில் வருகிற 23-ந்தேதி தொடங்கும் போட்டிகளில் பயன்படுத்தப்போவதாக 26 வயதான அவர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com