மகளிர் டி20 உலகக் கோப்பை - இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
மகளிர் டி20 உலகக் கோப்பை - இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இங்கிலாந்து
Published on

ஆறாவது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் அரைஇறுதி போட்டிக்கு நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், 71 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.

இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக மந்தனா 34 ரன்கள் எடுத்தார்.  ரோட்ரிகஸ் 26 ரன்களும், கவுர் 16 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் நைட் 3 விக்கெட்டுகளும், எக்லஸ்டோன், கோர்டான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வெற்றிபெற ஒரு ரன் தேவை என்ற நிலையில், 18-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜோனஸ். ஜோனஸ் 53 ரன்களுடனும், சிவர் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜோனஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com