திண்டுக்கல்: நீச்சல் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் பலி

திண்டுக்கல்லில் நீச்சல் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவி இறந்தார்.
திண்டுக்கல்: நீச்சல் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகன் மனோஜ் (வயது 20). கரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று தனது நண்பர்களுடன் ம.மு.கோவிலூரில் உள்ள தனியார் பள்ளி நீச்சல் குளத்தில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீச்சல் குளத்தில் தகுந்த பாதுகாப்பு இல்லாததால் மனோஜ் இறந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com