என்ஜினீல் கோளாறு: ஊட்டி மலை ரெயில் நடுவழியில் நின்றது

என்ஜின் பழுது காரணமாக ஊட்டி மலை ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
Published on

ஊட்டி:

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இடம் வழியாக இந்த ரெயில் செல்வதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இதில் பயணம் செய்து வருகிறார்கள்.

இன்று காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் வழக்கம் போல் புறப்பட்டு சென்றது. இதில் 200-க்கும் மேற்பட்டசுற்றுலா பயணிகள் இருந்தனர்.

இந்த ரெயில் ரன்னி மேடு -ஹில்குரோவ் இடையே சென்ற போது திடீரென என்ஜினீல் கோளாறு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் நடு வழியில் நின்றது . சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

குன்னூரில் இருந்து 2 கோச்களில் சென்ற ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்ட பின் மலை ரெயில் மீண்டும் ஊட்டி புறப்பட்டு சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com