கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனை நடத்தினர். #KarthiChidambaram #INXMedia
கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
Published on

சென்னை:

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் மொரீசியஸ் நாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே இரு முறை சம்மன் அனுப்பியது. அப்போது அவரது சார்பில் அவரது பிரதிநிதி ஆஜர் ஆனார்.

இதற்கிடையே, விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகுமாறு கோரி கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை அதிகாரி முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை அதிகாரி பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார். டெல்லியில் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக சென்னையில் கார்த்தி சிதம்பரத்தின் நண்பர்களின் வீடுகளில் இன்று அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின்  தொழில் கூட்டாளிகள் 3 பேரின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. #KarthiChidambaram #INXMedia #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com