

நாமக்கல்:
நாமக்கல் சந்தைபேட்டை புதூர், சின்னான் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 40).
இவர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர், தனது செல்போன் வாட்ஸ்- அப்பில், நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும், இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவி, 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மேலும் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதாகவும் தகவறான தகவலை பதிவு செய்து வாட்ஸ்- அப் மூலம் பகிர்ந்துள்ளார்.
இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரித்தபோது, வாட்ஸ்- அப்பில் தவறான தகவலை வரதராஜன் பரப்பி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து எலெக்ட்ரீசியன் வரதராஜனை கைது செய்தார்.