லாலாப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

லாலாப்பேட்டை அருகே ஆட்டுக்கு இலை பறித்த போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
லாலாப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

லாலாபேட்டை:

லாலாபேட்டை அடுத்துள்ள மேட்டுமகாதனபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் தேக்கமலை(21) கொத்தனார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்க்க அதே பகுதியில் உள்ள அங்கமுத்து என்பவர் தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அந்த தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு  தேக்கமலை இறந்து கிடந்தார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் தோட்டத்தில் தாழ்வாக செல்லும் மின்சாரகம்பி அருகே உள்ள மரத்தின் இலைகளை பறித்த போது மின்சாரம் தாக்கி தேக்கமலை இறந்தது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com