ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?: தேர்தல் கமி‌ஷன் நாளை செயல் விளக்கம் நடத்துகிறது

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் நாளை தேர்தல் கமிஷன் செயல் விளக்க கூட்டம் நடத்துகிறது.
ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?: தேர்தல் கமி‌ஷன் நாளை செயல் விளக்கம் நடத்துகிறது
Published on

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நடந்த டெல்லியில் உள்ள 3 மாநகராட்சி தேர்தலிலும் பா.ஜ.க வென்றது.

தொடர் தோல்வியால் விரக்தி அடைந்த காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், மின்னணு எந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக சந்தேக மும், புகாரும் வெளியிட்டன. ஆனால் மின்னணு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய இயலாது என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது. அதோடு எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் சவாலும் விட்டது.

இதையடுத்து ஆம்ஆத்மி கட்சி, ஒரு மின்னணு எந்திரத்தை வைத்து,அதில் எப்படி மோசடி செய்ய முடியும் என்பதை நடத்தி காட்டியது. இதை தேர்தல் கமி‌ஷன் ஏற்கவில்லை.


மின்னணு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என்பதை செயல்விளக்கம் மூலம் நிரூபிக்க தயார் என்றும் தேர்தல் கமி‌ஷன் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) அந்த செயல் விளக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com