நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம்: கடைசி பேரணியில் மோடி சூளுரை

நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கடைசி பேரணியில் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
நாங்கள் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம்: கடைசி பேரணியில் மோடி சூளுரை
Published on

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் அதற்கான தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.

பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பாஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினார்.

இன்று அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோன் பொதுக்கூட்டத்தில் பேசினார். 2019 தேர்தலுக்கான மோடியின் கடைசி பொதுக்கூட்டமாகும். இந்த கூட்டத்தில் ‘‘300 இடங்களுக்கு மேல் உறுதியாக கைப்பற்றுவோம்’’ என்று பேசினார்.

இதுகுறித்து கார்கோன் கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, குட்ச் (குஜராத்) முதல் கம்ருப் (அசாம்) வரை ஒட்டுமொத்த நாடே, மோடி அரசு 300 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று சொல்கிறது. 19-ந்தேதி வாக்களிப்பதன் மூலம் புதிய வரலாற்றை படைக்க இருக்கிறீர்கள். பல வருடங்கள் கழித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு ஆட்சியை தேர்வு செய்ய இருக்கிறீர்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com