உயிரிழந்த 7 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

உயிரிழந்த 7 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 7 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணி உடல் நலக் குறைவால் காலமானார்.

திருச்சிராப்பள்ளி மாநகரம், தில்லைநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாமிகண்ணு உடல் நலக் குறைவால் காலமானார்.

சென்னை பெருநகர காவல், செம்பியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பலராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த குருசாமி உடல் நலக் குறைவால் காலமானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்வராஜ் பணியின் போது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிகொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ராஜசேகர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த 7 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com