பண மோசடி வழக்கு: லாலு மகள் மிசா பார்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் மகளான மிசா பார்திக்கு, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பண மோசடி வழக்கு: லாலு மகள் மிசா பார்திக்கு அமலாக்கத்துறை சம்மன்
Published on

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்தின் மகளும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான மிசா பார்தி மீது வருமான வரித்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மிசா பார்தி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக புதுடெல்லியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவினர் கடந்த 8ம் தேதி சோதனை நடத்தினர்.

இதைதொடர்ந்து, லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தி, அவரது கணவர் சைலேஷ்குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், நாளை மிசா பார்தி ஆஜராக வேண்டும். அப்போது அவர் தனது பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் எனக்கூறி என அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல், மிசா பார்தி கணவர் சைலேஷ்குமாருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com